சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இடமளிக்க இந்தோனேசிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. பல்வேறு நாடுகளின் பொருளாதாரமும் கடும் சரிவை சந்தித்துள்ளது. கொரோனா தொடர்பாக சீனா உலக மக்களை எச்சரிக்க தவறிவிட்டதாகவும், உண்மையான தகவல்களை வெளியிடவில்லை எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அமெரிக்கா தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, அமெரிக்கா - சீனா நாடுகளுக்கு இடையே கொரோனா பிரச்னை மற்றும் வர்த்தகப் போர் தொடர்ந்து வரும் நிலையில் அமெரிக்கா ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளது. சீனாவில் உள்ள அமெரிக்க தொழில் நிறுவனங்களை மற்ற நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனங்களுக்காக இடம்:
இந்நிலையில் அமெரிக்க நிறுவனங்களுக்காக இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் 4,000 ஹெக்டேர் அளவில் இடம் தயாராகி வருவதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சுமார் 27 அமெரிக்க தொழிற்சாலைகளை இந்தோனேசியாவில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையேயான செல்போன் உரையாடலை தொடர்ந்து இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய ஜாவா ஆளுநர் விளக்கமளித்துள்ளார். ஆனால் சீனாவில் இருந்து வரும் நிறுவனங்கள் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 25ம் தேதி இரு நாட்டு தலைவர்களும் செல்போனில் உரையாடிய போது, இந்தோனேசியாவில் முதலீடு செய்வது குறித்து ட்ரம்ப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு வாய்ப்பு:
இதே போல் இந்தியாவிற்கு 200 அமெரிக்க நிறுவனங்கள் வரவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உற்பத்தி தொடர்பான நிறுவனங்கள் இந்தியா வரவிருப்பதாகவும், அமெரிக்க பொது தேர்தலுக்கு பிறகு இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.
உற்பத்தி தொடர்பான நிறுவனங்கள் இந்தியா வரவிருப்பதாகவும், அமெரிக்க பொது தேர்தலுக்கு பிறகு இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்கா மட்டுமல்லாமல் ஜப்பான், ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களும் சீனாவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சீனா - அமெரிக்கா இடையேயான பிரச்னை மூலம் இந்தோனேசியாவிற்கு தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் வர வாய்ப்புள்ளது. இதனிடையே, சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்கா வரும் பட்சத்தில் அவர்களுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என அதிபர் ட்ரம்ப்புக்கு அந்நாட்டு பொருளாதார ஆலோசகர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
credit ns7.tv