வருமான வரி தாக்கல் செய்யும் தனிநபர்களைப் பொருத்தவரை 2018-2019 நிதி வருடத்துக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது மிக ஆறுதலான விஷயம். நிரந்தர கணக்கு எண் என்று சொல்லப்படும் பான் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை இணைப்பதற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அது போல வரி நிவாரணத்துக்காக முதலீடு செய்வதற்கு தகுதியான முதலீடுகளான காப்பீடு ப்ரீமியம், மருத்துவ ப்ரீமியம் மற்றும் நன்கொடைகள் ஆகியவற்றுக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் TDS செலுத்துவதற்கு, e-TDS returns தாக்கல் செய்வதற்கு, Form No.16 வெளியீடு செய்வதற்கும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள compliances களுக்கு முன்பு வழங்கப்பட்ட காலக்கெடு ஜூன் 30, 2020 வரை நீட்டிக்கப்பட்டது அது தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மனதில் கொள்ளவேண்டிய சில அம்சங்கள் :
# ஒரு தனிநபர் 2018-19 நிதி ஆண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்வதற்கான கடைசி வாய்ப்பு ஜூலை 31, 2020 ஆகும். இந்த தேதி முடிந்த பின்னர் அவரால் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாது. தாக்கல் செய்யவேண்டி இருந்தால் வரி செலுத்துவோர் நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வரி தாக்கல் செய்வதில் ஏற்படும் காலகெடுவுக்கு அபராதம் விதிக்கப்படும்.
# குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆதார் மற்றும் பான் ஆகியவை இணைக்கப்படாவிட்டால் பான் அட்டை செயல்படாது.
வரி தாக்கலுக்காக நீட்டிக்கப்பட்டுள்ள வேறு காலகெடு குறித்து வரி செலுத்துவோர் தெரிந்துக் கொள்ள வேண்டியது:
* நிதியாண்டு 2019 -20 க்கான வரி தாக்கல் செய்வதற்கான காலகெடுவை ஜூலை 31, 2020 லிருந்து நவம்பர் 30, 2020 ஆக நீட்டித்துள்ளனர்.