நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பு மருந்து இம்மாத இறுதியில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரமுகம் காட்டி வரும் வேளையிலும், அதன் பரவலைக் தடுக்கவும் உலக நாடுகள் மருந்து கண்டிபிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க இரண்டு வகையான மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பு மருந்துகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் கொடுத்துள்ளது. பாரத் பயோ டெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இணைந்து ஒரு தடுப்பு மருந்தையும், Zydas cadila Health care நிறுவனமும் கண்டறிந்துள்ளது.
அவ்விரு மருந்துகளும் எலி, முயல் உள்ளிட்ட விலங்கினங்கள் மீது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர். இதுதொடர்பான விவரங்களை மேலிடத்துக்கு அனுப்பி உள்ளதாகவும், அதற்கான ஒப்புதல் கிடைத்தால், மனிதர்கள் மீது தடுப்பு மருந்துக்கான ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் இம்மாத இறுதிக்குள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 1,000 தன்னார்வலர்கள் மீது இந்த இரு மருந்துகள் பரிசோதிக்கப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள்