ராகுல் காந்தியிடம் கிங் லியர் தொடர்பான ஏதோ ஒன்று இருக்கிறது. அவர் மிகவும் நேசிப்பவர்கள் தான் அவரை முதலில் காட்டிக் கொடுகின்றனர். மிகக் குறைவாக நேசிக்கப்பட்டவர்கள், அவருடன் இருப்பவர்களாக உள்ளனர்.
இதை நான் தெரிந்து கொள்ள வேண்டும்…
2004 ல் அவர் நாடாளுமன்றத்தில் நுழைந்தபோது ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட் இருவரும் சிறந்த நண்பர்கள். அவரும் எப்போதும் அவர்களுடன் நெருக்கமாக இருந்தார். மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்ற மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பின் போது ராகுலின் கண் சிமிட்டல் நினைவிருக்கிறதா? எந்த நேரத்திலும் தனது வீட்டிற்கு வரக்கூடிய ஒரே நபர் சிந்தியா மட்டுமே என்ற ராகுலின் கூற்றை? அவருடனான இந்த நெருக்கம் தான் காங்கிரஸ் கட்சிக்குள் பழைய மற்றும் புதிய தலைமுறையினருக்கு இடையில் மோதல் என்ற புராணக் கதையை கட்டம்டைத்தது. லட்சியங்களிலும்,சாதனைகளிலும் எந்தவிட மேம்போக்குத்தனம் காட்டாத பல இளம்தலைமுறை தலைவர்கள் கட்சிக்குள் இருக்கத்தான் செய்கின்றனர். உயர் சாதனையாளர்கள் தான் தாங்கள் நம்பும் வளமையான மேய்ச்சல் நிலங்களை நோக்கி நகர்கின்றனர்.
ஜவஹர்லால் நேருவை கைவிட்ட ஜெயபிரகாஷ் நாராயண் , ஆச்சார்ய நரேந்திர தேவ், அசோகா மேத்தா ஆகியோரை என் தலைமுறை நினைவில் கொள்ளும். ஆனால், அந்த அரசியல் நிகழ்வு பின்னணியில் பெரிய சிந்தாந்தம் இருந்தது. நேருவின் சமூகவுடமை கொள்கை போதியளவு இல்லை என்று அவர்கள் நினைத்தார்கள். நேருவின் சமூகவுடமை கொள்கையால் ராஜாஜி வெளியேறினார். அரசியல் ஆதாயம் தேடாமல், சிறந்த இந்தியா என்று அவர்கள் நம்பியதற்கான வழியைக் கண்டுபிடித்தார்கள்.
பின்னர் சிண்டிகேட் வந்தது. இந்திரா காந்தி யாருடைய கைப்பாவையாகவும் இருக்க விரும்பவில்லை என்பது தெளிவானவுடன் அவர்களின் அரசியல் பயணம் தெளிவற்று போனது. சந்திர சேகர் மற்றும் அவரின் இளம் துருக்கியர்கள் குழு அரசியலைத் தாண்டி கொள்கைகளை முன்னெடுத்தது. இந்திரா காந்தியின் சமூக பார்வையிலும்,மதச்சார்பற்ற தன்மையிலும் போதிய ஆழம் இல்லை என்று அவர்கள் நினைத்தர்கள்.ஆனால் அவர்கள் கொள்கைகளில் சமரசம் செய்து, காவி உடையை ஆதரதத்வுடன், அவர்களின் ஜனதா சோதனை முயற்சி சீட்டுக்கட்டை போல் சரிந்தது.
ராஜீவ் காந்தியின் அரசியல் பயணங்களும் இதே வழியில் தான் செல்கின்றன. அவரின் நம்பிக்கை பெற்ற பிரதான மந்திரி விஸ்வநாத் பிரதாப் சிங் இருந்தார். சிந்தியா, பைலட் இருவரையும் ஒன்றாக கலந்தவர் அப்போதைய ஆரிப் முகமது கான். இவர்கள் உருவாக்கிய ஜனமோர்ச்சா (பிற்காலத்தில், தேசிய முன்னணி) தடுமாறி சரிந்தது.
மிக சுருங்க சொன்னால்,காங்கிரஸிலிருந்து வெளியேறுபவர்களின் தலைவிதி இதுதான் என்பது வரலாற்று உண்மை.
எனவே, சச்சின் பைலட்டும், சிந்தியாவும், “ நாங்கள் பாதிக்கப்பட்டோம், எனக்காக அழ, இந்தியா” என்று நீலக் கண்ணீர் வடிக்கலாம். ஊடகங்களும் அவர்களை உற்சாகப்படுத்தும். ஆனால், காங்கிரஸ் அதன் கண்ணீரைத் துடைத்துவிட்டு தனது எதிர்காலத்தை தானே தீர்மானித்துக் கொள்ளும் நிலையை நோக்கி பயணிக்கின்றது. சட்டமன்றத் தேர்தலில் சச்சின் பைலட் ஒரு பரபரப்பான (ஆனால் ஓரளவு) வெற்றியை தக்க வைத்திருக்கலாம். ஆனால் மக்களவைத் தேர்தலில் மோடிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவினார் . அவர் இளம் வயது என்பதால் இவர்கள் இருவருக்கும் பதவி வழங்கப்படாமல் இல்லை. மாறாக, அசோக் கெலாட் அதிக எண்ணிக்கையை கொண்டிருந்தார். மக்கள் மன்றத்தில் கமல்நாத் வெற்றி பெற்றார் என்பது தான் நிதர்சனமான உண்மை.
ஒரு விசயத்தை இங்கு நன்றாக கவனிக்க வேண்டும். சாலை விபத்தில் தந்தை இறந்தபோது பைலட் கட்சியில் சேர்ந்தார். அப்போது, அவருக்கு வயது 23. 26 வயதில் பாராளுமன்ற உறுப்பினர், 32 வயதில், மத்திய அமைச்சர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இந்திய நிறுவன சட்டத்தை மாற்றியமைப்பதில் பாராளுமன்றத்தில் அவர் எடுத்த முயற்சிகளை பாராட்டினேன். அவர் 36 வயதில் ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டர். 40வது வயதில், ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டார். நிச்சயமாக, அவரின் திறமைகள் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், அரசியல் ஆதரவும் முக்கிய பங்கு வகித்தது. டிட்டோ, இதே கதைதான் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கும் (விமான விபத்தில் அவரது தந்தை மரணமடைந்தார் என்ற ஒற்றை வித்தியாசத்தைத் தவிர). அவர்களால் தோல்வியை எடுத்துக் கொள்ள முடியவில்லை. இது அவர்களை வளர்ப்பை காட்டுகிறது. வெற்றிபெறும் போது அரசியலில் மகிழ்ச்சியாக இருப்பது குழந்தை தனம்.
அவர்கள் விரும்பும் வழியில் பயணிப்பதை அவர்கள் விரும்புகின்றனர் ( காங்கிரஸ் கட்சியோடு தங்களை மீண்டும் இணைத்துக் கொள்ளலாம்….. ஏனெனில், காங்கிரஸ் என்பது ஒரு தர்மஷாலாவைப் போல) ஆனால் காங்கிரசுக்கு படிப்பினை என்னவென்றால், கட்சியின் நம்பிக்கையை அனுபவிக்கும் தலைவர் நமக்கு தேவைப்படுகிறது. இது சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வாத்ரா ஆகிய மூன்று பேர் கொண்ட தேடலாக சுருங்குகிறது. இது கட்சியின் டி.என்.ஏவில் எழுதப்பட்டுள்ளது. அவர்களில் யார் வேண்டுமானாலும் இந்த பணியை சிறப்பாக செய்யலாம்.