வியாழன், 16 ஜூலை, 2020

இந்திய – நேபாள ராணுவ உறவு எத்தகைய சிறப்பு வாய்ந்தது?

இந்திய – நேபாள எல்லையில், ஜம்மு மாவட்டத்தின் நெளஷேரா பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் கடந்த ஜூலை 10ம் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில், நேபாளத்தின் கூர்கா ரெஜிமெண்டில் இடம்பெற்றிருந்த வீரர் ஹவில்தார் சம்பூர் குருங் (வயது 36) உயிரிழந்தார். குருங்கின் மரணம், இந்திய – நேபாள உறவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கூர்கா ரெஜிமெண்ட் என்பது, இந்திய ராணுவத்தில் நேபாள படை வீரர்கள் இருக்கும் முக்கிய படைப்பிரிவு ஆகும்.

இந்திய – நேபாளம் இடையே ஏற்பட்ட ராணுவ உறவு மற்றும் அதன் பரிணாமம் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

நேபாளம் உடனான இந்திய ராணுவ உறவின் துவக்கம்

இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் வி.பி, மாலிக் எழுதியுள்ள இந்தியாவின் இராணுவ மோதல்கள் மற்றும் இராஜதந்திரம் என்ற புத்தகத்தில், இமாலய மலைத்தொடர் பரவியுள்ள நாடுகளுடனான இந்தியாவின் ராணுவ தொடர்பு, மகாராஜா ரஞ்சித் சிங்கின் காலத்திலிருந்தே உள்ளது. அவர் லாகூர் பகுதியில் நியமிக்கப்பட்டிருந்த படைப்பிரிவில் அதிகளவில் நேபாள வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த படைப்பிரிவிற்கு லத்தூர் அல்லது அதிர்ஷ்ட வீரர்ள் என்ற சிறப்புப்பெயர் உண்டு.

பிரிட்டிஷ் இந்தியா, 1815ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி, நசிரி ரெஜிமெண்டிலிருந்து, கூர்கா ரெஜிமெண்ட் எனும் முதல் பட்டாலியனை உருவாக்கியது. முதலாம் உலகப்போர் நடைபெற்று வந்த அந்த நேரத்தில், பிரிட்டிஷ் இந்தியா ராணுவம் சார்பாக 10 கூர்கா ரெஜிமெண்ட் படைப்பிரிவினர் கலந்துகொண்டனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, இந்த ரெஜிமெண்ட்கள் பிரிட்டிஷ் மற்றும் இந்திய ராணுவப்படைகளாக பிரிக்கப்பட்டு, 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரிட்டன் – இந்தியா – நேபாளம் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி பிரிக்கப்பட்டது. இதன்படி ஒரு லட்சம் படைவீரர்களுடன் கூடிய 6 கூர்கா ரெஜிமெண்ட்கள், இந்தியாவிற்கு வந்தன. அதன்பின் 11 கூர்கா ரைபிள்பிரிவு, 7வது கூர்கா மற்றும் 10வது கூர்கா ரைபிள் பிரிவுடன் இணைந்து செயல்பட துவங்கியது. அவர்கள் பிரிட்டிஷ் ராணுவத்திற்கு இடம்பெயரவில்லை.

நேபாள நாட்டு மக்கள் இந்திய ராணுவத்தில் இணையலாமா?

இந்திய ராணுவத்தில் நேபாள நாட்டு மக்களும் இணையலாம். அவர்கள் ராணுவத்தில் படைவீரர்களாகவம், அதிகாரிகளாகவும் பணியாற்றலாம். நேபாள நாட்டவர்கள், தேசிய பாதுகாப்பு அகாடமி நடத்தும் தேர்வுகள் அல்லது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுகளை எழுதி இந்திய ராணுவத்தில் தங்களை இணைத்துக்கொள்ளலாம்.

கார்கில் போரின் போது 1/11 கூர்கா ரைபிள் பிரிவு பட்டாலியனில் சிறப்பாக செயல்பட்டதற்காக, வீர் சக்ரா விருது பெற்ற கர்னல் லலித் ராய், நேபாள நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

நேபாள ராணுவமும், ராணுவம் சார்ந்த பயிற்சிகளை பெறுவதாக அவர்களது அதிகாரிகளை, இந்திய ராணுவத்திடமும், அதற்கான கல்லூரிகளுக்கும் தொடர்ந்து அனுப்பி வருகிறது.

கூர்கா ரெஜிமெண்டில், 35 பட்டாலியன்கள் உள்ளன. நேபாள நாட்டைச் சேர்ந்தவர்களை இதில் அதிகம் பணியமர்த்தப்படுகின்றனர்.
2016ம் ஆண்டு நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக்கிற்கு தலைமையேற்ற லெப்டினென்ட் ஜெனரல் டி எஸ் ஹூடா (ஓய்வு), 4வது கூர்கா ரெஜிமெண்டை சேர்ந்தவர் ஆவார். இவர், இந்தியா மற்றும் நேபாள ராணுவத்திற்கிடையே இணைப்புப்பாலமாகவும், உள்நாட்டு உறவு வலுப்பெறுவதற்கான பிரதிநிதியாகவும் இருந்துவந்தார். ஒவ்வொரு ஆண்டும், இந்த பட்டாலியன்கள் நேபாள நாட்டிற்கு வருகை தரும். அப்போது ரெஜிமெண்டில் இடம்பெற்றுள்ள இளம் அதிகாரிகள், இமாலய மலைத்தொடரில் டிரக்கிங் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவர், அங்குள்ள மக்களை சந்திப்பதுடன் அவர்கள் முன்னாள் ராணுவத்தினரையும் சந்தித்துப்பேச இதன்மூலம் வாய்ப்பு கிடைக்கும்.

கூர்காலி மொழியில், ஜெய் மகா காளி, அயோ கோர்காலி என்று இரண்டு நாட்டு படைவீரர்களும், அதிகாரிகளும் இணைந்து முழக்கமிடுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், இந்திய அமைதி பாதுகாப்பு படை தளபதியாக இருந்த லெப்டினென்ட் ஜெனரல் திபேந்தர் சிங் (ஓய்வு), அந்த கால நினைவுகளை நினைவுகூர்ந்தார்.

இந்தியர்களை போன்று நேபாள நாட்டவரும், இந்திய ராணுவத்தில் சம உரிமைகள் உள்ளதா?

ஆம். இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றபிறகு இந்தியர்கள் அடையும் பலன்களைப்போலவே, நேபாள நாட்டவரும் பலன்களை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பிரிட்டிஷ் காலத்தில் அவர்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பினும், தற்போது அவைகள் களையப்பட்டு அவர்களும் சமமாக நடத்தப்பட்டு வருகின்றனர். நேபாள நாட்டில் உள்ள கிராம மக்களின் நல்வாழ்வு திட்டங்களுக்காக, இந்திய ராணுவம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்திய ராணுவ தளபதி தான் நேபாள ராணுவத்திற்கு கவுரவ தளபதியா?

ஆம். 1972ம் ஆண்டில் பீல்டு மார்ஷல் சாம் மானேக்ஷாவிற்கு பிறகு, இந்திய ராணுவத்தின் தளபதி, நேபாள ராணுவத்தின் கவுரவ தளபதியாகவும், அதேபோல், நேபாள ராணுவத்தின் தளபதி, இந்திய ராணுவத்தின் கவுரவ தளபதியாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.