அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அங்குள்ள 23 மாவட்டங்களில் உள்ள 13 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதுவரை வெள்ளத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அசாமில் நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.