வரலாற்று உடன்படிக்கையை சீனா மதிக்கவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
சீனா உடனான எல்லை பிரச்சனை குறித்து மக்களவையில் விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனா உடனான எல்லை பிரச்சனையில் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்றார். எல்லையின் பாரம்பரிய மற்றும் வழக்கமான எல்லை சீரமைப்பை சீனா அங்கீகரிக்கவில்லை என கூறிய ராஜ்நாத் சிங், இந்த சீரமைப்பு நன்கு நிறுவப்பட்ட புவியியல் வல்லுநர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது என நம்புவதாக தெரிவித்தார்.
வரலாற்று உடன்படிக்கையை சீனா மதிக்கவில்லை என கூறிய ராஜ்நாத் சிங், ஒருதலைபட்சமாக நிலைமையை மாற்றும் நடவடிக்கைகள், எல்லையில் அமைதியை சீர்குலைக்கும் எனவும் எச்சரித்தார். மேலும், எந்த விலை கொடுத்தாவது எல்லையை காப்போம் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.