திங்கள், 21 செப்டம்பர், 2020

“நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது” - மா.சுப்பிரமணியம்

Image

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அற வழியில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய மக்கள் பாதை இயக்கத்தினரை அராஜகமான முறையில் காவல் துறை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள விவசாய சட்ட மசோதா விவசாயிகளுக்கு எதிரான சட்ட மசோதா என்று அனைவரும் கூறுவதாகவும் ஆனால் முதலமைச்சர் மட்டும் ஆதரவு என்று சொல்வதாக விமர்சனம் செய்தார்.


இணையதளம் மூலம் திமுகவில் இணைந்ததவர்கள் எண்ணிக்கை விளம்பரத்திற்காக என்ற அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கருத்திற்கு பதிலளித்த மா.சுப்பிரமணியம் இணையதளம் மூலம் நீங்களே சரிபார்த்துக் கொள்ளலாம் என்றார். 

Related Posts: