ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

புதிய கல்விக்கொள்கைபடி மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும்! - மத்திய அரசு

 

Image

புதிய கல்விக்கொள்கைபடி மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் என மத்திய கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவதற்காக மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டதா என திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். அப்படி கோரிக்கை வைக்கப்பட்டிருந்தால், அதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்றும் கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது. தமிழக அரசிடம் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், புதிய கல்விக்கொள்கைப்படி மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் என்று கூறியுள்ளது. ஆனால் மூன்றாவது மொழியாக எந்த மொழியை கற்க வேண்டும் என்பது மாநிலம், மாணவர்களின் முடிவு என்றும் கூறியுள்ளது. மாநிலங்களின் மீது எந்த மொழியும் திணிக்கப்படாது என்றும் விளக்கமளித்துள்ளது.