ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

39 ஆண்டுகால சேவையை இன்றுடன் நிறைவு செய்த INS Viraat போர்க்கப்பல்!

Image

இந்திய கடற்படையில் 39 ஆண்டுகால சேவை செய்த உலகின் நீண்டகாலம் சேவையில் இருந்த போர்க்கப்பல்களுள் ஒன்றான INS Viraat விமானம் தாங்கி போர்க்கப்பல் இன்று தனது இறுதி கடல் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் இருந்து INS Viraat போர்க்கப்பல் குஜராத்தில் உள்ள அலாங்கிற்கு புறப்பட்டது. இத்துடன் இதுவே இப்போர்க்கப்பலின் கடைசி கடல் பயணமாகவும் அமைகிறது. சேவையிலிருந்து விலக்கப்படும் INS Viraat இதற்கு பின்னர் குஜராத் சென்றவுடன் உடைக்கப்பட்டுவிடும்.

 

1

1987ம் ஆண்டும் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட INS Viraat விமானம் தாங்கி போர்க்கப்பல் இங்கிலாந்தில் இருந்து வாங்கப்பட்டது. பிரிட்டனின் Royal Navy படையில் HMS Hermes என்ற பெயரில் அழைக்கப்பட்ட இக்கப்பல் அப்படையில் 27 ஆண்டுகள் பணியில் இருந்தது. இதன் மூலம் சுமார் 56 ஆண்டுகள் இக்கப்பல் சேவையில் இருந்துள்ளது. இதன் மூலம் பணியில் நீண்டகாலம் இருந்த போர்க்கப்பல் என்ற பெருமையையும் INS Viraat பெற்றுள்ளது.

மும்பையில் இருந்து புறப்பட்டு குஜராத்தின் அலாங்கிற்கு வரும் 21ம் தேதி சென்றடையும் INS Viraat குஜராத் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்று 9 முதல் 12 மாதங்களுக்குள்ளாக உடைக்கப்படும்.

Operation Jupiter, Operation Parakram மற்றும் Operation Vijay (கார்கில் போர்) என 3 முக்கிய போர்களில் ராணுவத்திற்கு பக்கபலமாய் செயல்பட்டுள்ளது. மேலும் INS  Vikrantஐ தொடர்ந்து இந்தியாவில் உடைக்கப்படும் 2வது போர்க்கப்பல் இதுவாகும். இப்போர்க்கப்பல் 1,500 பேரை சுமந்துசெல்லும் திறன் கொண்டதாக இருந்தது.

 

3

ஆரம்பத்தில் இக்கப்பலை இந்தியா வாங்கும்போது பிரிட்டன் கப்பல்படையினர் INS Viraat கப்பல் 7 ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்காது என கருதியுள்ளனர். ஆனால் அவர்களின் கணிப்பை மீறி 4 மடங்கு அதிக காலம் அது உழைத்துள்ளது. இதன் மொத்த எடை 27,800 டன்னாகும்.

2ம் உலகப் போர் காலகட்டத்தில் கட்டப்பட்டு ஒரு நாட்டுக்காக அதிக காலம் சேவையில் இருந்த ஒரே கப்பல் என்ற வரலாற்று முத்திரையை INS Viraat பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.