புதன், 23 செப்டம்பர், 2020

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பதில்

 தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டயன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் 27 கூட்டுறவு சங்கங்கள் மூலம் 51 இடங்களில் அத்தியாவசிய பொருள் விற்பனை செய்ய அம்மா நகரும் நியாய விலைக் கடையை இன்று செங்கோட்டயான் கோடி அசைத்து துவங்கி வைத்தார். பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய அவர் , ” தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை , ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை விடப்பட்டதை மீறி தனியார் பள்ளிகள் வகுப்புகளை நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், நடப்பு ஆண்டில் 15.30 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 2.5 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு மாறியுள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார்.

பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது . அனைத்து வகுப்புகளும் ஒரே நேரத்தில் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்தார். சமூக இடைவெளியை பின்பற்ற தேவையான வகுப்பறைகள் உள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசால் அமைக்கப்பட்ட குழு தந்த அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன என்றும், எத்தனை போட்டித் தேர்வுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் பாடத்திட்டத்தை உருவாக்குவோம் என்று முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.