எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே வேளாண் தொடர்பான மூன்று மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.
நாடாளுமன்ற மக்களவையில் விவசாயிகளின் விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாயிகள் பாதுகாப்பு மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் தாக்கல் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மூன்று மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற பாதுகாப்பை விவசாயிகள் இழக்க நேரிடும் என்றும் குற்றம்சாட்டின. எனினும், குரல் வாக்கெடுப்பு மூலம் மூன்று மசோதாக்களும் மக்களவையில் நிறைவேறின. அதேநேரம், மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.