Shyamlal Yadav
FinCEN Files — Antiques smuggler in Tamil Nadu jail, and a trade that flourished even after his arrest : அமெரிக்காவில் பண மோசடி சட்டங்களை அமல்படுத்துவதற்காக முயற்சித்து வரும் ஃபினான்சியல் க்ரைம்ஸ் என்ஃபோர்ஸ்மெண்ட் நெட்வொர்க் ( Financial Crimes Enforcement Network (FinCEN)), அமெரிக்காவின் ஒழுங்குமுறை அமைப்பு சமீபத்தில் மிகப்பெரிய அளவில் தரவுகளை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழக சிறையில் இருக்கும் சுபாஷ் கபூர், பழங்கால பொருட்களை கடத்தும் நபர், குறித்த முக்கியமான பார்வைகளை வழங்குகிறது இந்த தரவுகள். சிறைக்கு சென்ற பிறகும் கூட நடைபெற்ற கடத்தல் மற்றும் அதற்காக நடைபெற்ற பணபரிவர்த்தனை குறித்த பல்வேறு தகவல்களை வழங்குகிறது இந்த தரவுகள்.
நியூயார்க்கின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி 2017 மார்ச் 20 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் (Suspicious Activity Report (SAR)) இடம்பெற்ற 17 நபர்களில் கபூர் ஒருவராக இருந்தார். “சர்வதேச கடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட கலைப்பொருட்களை கடத்ததுல் மற்றும் சட்டவிரோதமாக விற்றதன் மூலமாக மில்லியன் கணக்கான டாலர்களைப் பெற்றுள்ளார்”.
To read this article in English
மார்ச் 2010ஆம் ஆண்டு முதல் மார்ச் 2017ம் ஆண்டு வரை சுமார் 27.88 அமெரிக்கா டாலர்கள் மதிப்பில் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது. எஸ்.ஏ.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கையில், கலை பணமோசடிக்கான வழியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ரெட் ஃப்ளாக் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக பணத்தை மறைக்க இது பயன்படுகிறது. ஃபின்சென் கோப்புகளை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ், சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள், பஸ்ஃபீட் செய்தி மற்றும் 108 ஊடகவியலாளர்களுடன் இணைந்து உலகெங்கிலும் உள்ள வங்கி இணைப்புகள் மற்றும் பணமோசடி தடுப்பு அமைப்புகள் குறித்து விசாரித்து வருகிறது.
தமிழக கோவில்களில் உள்ள சிலைகளை திருடிய வழக்கில் 71 வயதாகும் கபூர் தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ளார். அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள பல நாடுகளில், சிலை கடத்தல் தொடர்பாக இவர் மீது வழக்குகள் உள்ளது. அக்டோபர் மாதம் 30ம் தேதி, 2011ம் ஆண்டு ஃப்ரான்க்ஃபூருட்டில் இவர் கைது செய்யப்பட்டு, ஜூலை 2012ம் ஆண்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டார்.
2019ம் ஆண்டு நியூயார்க்கில் அமைந்திருக்கும் குற்றவியல் நீதிமன்றத்தில், உள்நாட்டு பாதுகாப்புத்துறை பதிவு செய்த வழக்கில், கபூரால் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட பழங்கால பொருட்களின் மதிப்பு 145.71 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகராகும். கடந்த 30 ஆண்டுகலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள், ஓவியங்கள் ஆகியவற்றை கடத்தி விற்பனை செய்துள்ளார் கபூர். அவையாவும் திருடப்பட்ட கலைப்பொருட்கள் என்று தெரிய வந்துள்ளது. 2622 பொருட்கள் இதுவரை கைப்பற்றபட்டுள்ளன என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த செய்தி தொடர்பான பல்வேறு முக்கிய இணைப்புகள் உங்களுக்காக இங்கே
1. ஃபின்சென் ரகசிய ஆவணங்கள் என்றால் என்ன?
2. ஃபின்சென் ஆவணங்கள்- கிழியும் முகத்திரை, அம்பலமாகும் மோசடி நிறுவனங்கள்
3. FinCEN Files : பணமோசடி விவகாரம் … அடிபடும் ஐபிஎல் அணியின் ஸ்பான்சர் பெயர்!
4. Fincen Files : தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கிய தாவூத் இப்ராஹிமின் ஃபைனான்சியர்!
5. FinCEN Files : நிதி மோசடி குறித்து வெளியான தகவல்கள்; விசாரணையை துரிதப்படுத்தும் அதிகாரிகள்!
கபூரின் இடைத்தரகர் ஒருவர் ஆஃப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் 1990-ல் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தொல்லியல் தளங்களை அணுக முஜாஹிதீன் தளபதி ஒருவருக்கு லஞ்சம் கொடுத்துள்ளார். இந்த தொடர்பின் மூலம் கந்தாரா நாகரீக காலத்தை ஒட்டிய இரண்டு ஸ்டக்கோ புத்தர் தலைகள் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 28 சிலைகள் சம்பந்தப்பட்ட இரண்டு திருட்டு வழக்குகள் அவர் மீது உள்ளது. இது குறித்து தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிஐடி விசாரித்து வருகிறது. ஏப்ரல் 2008இல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரேஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், மற்றும் அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயிலிலிருந்தும் சிலைகள் திருடப்பட்டது தொடர்பான வழக்குகள் இவையாகும். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கூடுதல் தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் சிலை திருட்டு வழக்குகளில் இந்த வழக்குகளும் அடங்கும்.
14 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சிலைகளை மறைத்துவைத்தது தொடர்பாக, கபூர் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து, கபூரின் சகோதரி சுஷ்மா சரீன் அக்டோபர் மாதம் 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ஹிட்டன் ஐடல் (Hidden Idol) என்ற பெயரில் எஃப்.பி.ஐ. 2016ம் ஆண்டு மார்ச் மாதம் பல கட்ட சோதனைகளை நடத்தியது. நியூயார்க்கில் நான்சி வீனர் கேலரியை வைத்து நடத்தும் நான்சி, கபூருக்கு கடத்தலில் உதவியதாக கூறி டிசம்பர் மாதம் 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது சுஷ்மா மற்றும் நான்சி பெயிலில் வெளியே உள்ளனர்.
டிசம்பர் 21, 2016 அன்று, நியூயார்க்கில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரில் “1999 மற்றும் 2016க்கு இடையேயான காலங்களில், குற்றங்களை உருவாக்கும் நோக்கத்துடன்”, நான்சி வீனர் தனது கேலரியை பயன்படுத்தியுள்ளார். “சில ஏலங்கள் மூலம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருடப்பட்ட, மில்லியன் டாலர்கள் மதிப்பிலான தொல்பொருட்களை வாங்க, கடத்த, மோசடி செய்ய தன் நிறுவனத்தை பயன்படுத்தினார் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கபூர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் வர்த்தகம் செய்த நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது எஸ்.ஏ.ஆர். பெரும்பாலான பண பரிவர்த்தனைகள் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி கிளைகளின் கணக்குகள் மூலம் செய்யப்பட்டன என்பது தெரியவந்துள்ளது.