புதன், 16 செப்டம்பர், 2020

மாநிலங்களவையில் நிறைவேறியது விமான சட்ட திருத்த மசோதா!

 

மாநிலங்களவையில் நிறைவேறியது விமான சட்ட திருத்த மசோதா!

சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தை சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு கழகமாக மாற்ற வகை செய்யும் விமான சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. 


சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தை சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு கழகமாக மாற்றவும் விமானப்போக்குவரத்து பாதுகாப்பில் புதிய மாற்றாங்கள் கொண்டுவரவும் மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி விமான சட்ட திருத்த மசோதா கடந்த மார்ச் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது தொடங்கியுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த விமான சட்ட திருத்த மசோதா இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மாநிலங்களவையில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூர் தாக்கல் செய்தார்.  

 

இந்த புதிய சட்ட திருத்தத்தின் மூலம் விமான போக்குவரத்து தொடர்பான விதிகளை மீறுவோருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வகை செய்கிறது.
இந்த மசோதா, அப்படி இந்த தண்டனைகளை தனித்தனியாகவும் இரண்டையும் சேர்த்து கூட்டாகவும் விதிக்க வாய்ப்பு உள்ளது. விமான பயணிகள் ஆயுதங்களை எடுத்துச் செல்வதும் வெடிகுண்டுகளை எடுத்து செல்வதும் மற்ற எரிபொருள்களை கொண்டு செல்வதும் தடை செய்யப்படுகிறது. அதேபோல விமான நிலையங்களை சுற்றில் சட்டவிரோதமாக கட்டடங்கள் எழுப்புவது தடை செய்யப்படுகிறது இந்த விதிகளை மீறி செயல்படுவோர் மீது 10 லட்சம் முதல் 100 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இந்த திருத்த மசோதா வகை செய்கிறது.

 

மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பின்னர் நாடாளுமன்றத்தில் பேசிய ஹர்திப் சிங் பூரி, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகளவில் மூன்றாவது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது, மேலும் விமானத் துறைகளில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது, கடந்த ஐந்து ஆண்டுகளில் பயணிகளின் வளர்ச்சியைப் பொறுத்தவரை, 2008-09 மற்றும் 2013-14 ஆம் ஆண்டுகளில் 9% ஆக இருந்த விமானப் பயணிகளின் வளர்ச்சி 2014-15 மற்றும் 2018-20 ஆம் ஆண்டுகளில் இது 12.4% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.