புதன், 23 செப்டம்பர், 2020

மத்திய அரசு தார்மீக அடிப்படையில் ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

 மத்திய அரசு தார்மீக அடிப்படையில் ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ஆலோசனைக்கு பிறகு, அமைச்சர் ஜெயக்குமார்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இதுவரைக்கும் இழப்பீடாக, மத்திய அரசு 18 ஆயிரத்து 147 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மத்திய அரசிடமிருந்து வரக்கூடிய 12 ஆயிரத்து 250 கோடி ரூபாய், ஜிஎஸ்டி நிலுவைத் தொகையினை தார்மீக அடிப்படையில் கொடுக்க வேண்டும் என்றும், ஜெயக்குமார் கோரிக்கை விடுத்தார்.