கட்டுப்படுத்தப்படாத பகுதிகளில் உள்ள 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களக் சுய விருப்பத்தின் பேரில், வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளுக்குச் செல்லலாம் என்று தமிழக அரசு தெரிவித்தது.
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பாடங்களில் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர் மூலம் களைவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 50 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, செப்டம்பர் 30 வரையில் மாணவர்களுக்குப் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி மற்றும் பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று மத்திய அரசு முடக்கநிலை நீக்கத்தின் நான்காவது கட்ட வழிமுறைகளில் தெரிவித்தது. இருந்த போதிலும், செப்டம்பர் 21 ஆம் தேதியில் இருந்து கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியில் மட்டும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கு, தங்கள் விருப்பத்தின் பேரில் நேரில் பள்ளிக்கூடங்களுக்கு வர அனுமதிக்கலாம். அவர்களின் பெற்றோர்/ காப்பாளர் எழுத்துபூர்வமாக ஒப்புதல் அளிப்பதன் அடிப்படையில் மட்டுமே இதை அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.
முன்னதாக, தற்போது பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டயன் தெரிவித்தார்.