தேசிய அளவில் நிலவும் போக்கிற்கு இணங்க, நாட்டில் மிக அதிகபட்ச கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையைக் கொண்ட 5 மாநிலங்கள், கடந்த சில நாட்களாக சிகிச்சை பெறும் கோவிட்-19 தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் வரவேற்கத்தக்க சரிவைக் காட்டுகின்றன.
ஆந்திராவில் தற்போது சிகிச்சை பெறும் கோவிட்-19 தொற்று நோயாளிகளின் எண்ணிகையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அங்கே கடந்த 2 வாரங்களில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 சதவீதம் குறைந்துள்ளது. ஆந்திராவில், செப்டம்பர் 10ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் 10,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் தொடர்ந்து பதிவாகிக்கொண்டிருந்த நிலையில், இப்போது குறைந்து வருகிறது. ஆந்திராவில் புதிய தொற்று கண்டறிதல்கள் இப்போது 8,000க்கு கீழே வந்துள்ளன. அதே நேரத்தில், தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 10,000க்கு மேல் உள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தினசரி தொற்று எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் மாத தொடக்கத்தில் இருந்ததைவிட பாதியாக குறைந்துள்ளது. அது இப்போது 2.5 சதவீதத்திலிருந்து 1.25 சதவீதமாக குறைந்துள்ளது.
இதற்கு காரணம் கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை எண்ணிக்கையில் ஏற்பட்ட சிறிது அளவு குறைந்துள்ளதும் ஒரு பகுதி காரணம். இந்த மாத தொடக்கத்தில் இருந்து கடந்த 7 நாட்களில் தினசரி பரிசோதனைகளின் தற்போதைய சராசரி மிகவும் குறைவாக உள்ளது. ஆனால், அது அந்த எண்ணிக்கை மிகப் பெரிய எண்ணிக்கை அல்ல. கடந்த ஒரு வாரத்தில், ஒவ்வொரு நாளும் சராசரியாக 9.81 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. சுமார் 10 நாட்களுக்கு முன்பு இந்த சராசரி 10.94 லட்சம் என்ற அளவில் இருந்தன.
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தினசரி கண்டறியப்படும் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 90,000 என்ற அளவில் உள்ளது. செப்டம்பர் 5ம் தேதி முதல் 90,000க்கும் மேல் புதிய தொற்றுகள் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பிறகு 75,000 முதல் 98,000வரை புதிய தொற்று கண்டறிதல் ஏற்ற இறக்கங்களுடன் உள்ளது.
இதனிடையே, கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை கூர்மையான அளவு அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை 1 லட்சம் எண்ணிக்கையை தாண்டியது. தினசரி புதிய தொற்று கண்டறிதல்களைவிட தொற்றில் இருந்து அதிக அளவில் குணமடைந்து வருவது நீண்ட காலத்திற்கு அப்படியே தொடர்தால் ஆரோக்கியமான அடையாளமாக கருத்தப்படும். இந்த கட்டத்தில், உச்சகட்டம் பக்கத்திலேயே இருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம். ஆனால், இந்த கட்டத்தில், அதைச் சொல்வது இன்னும் விரைவாக இருக்கும். குறிப்பாக, டெல்லியின் அனுபவத்தில் இதுபோன்ற போக்குகள், ஒரு மாதத்திற்கும் மேலாக இருந்தாலும் மாற்ற முடியாதது அல்ல. அது எந்த நேரத்திலும் மாறக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
தற்போதைய நிலவரப்படி, பல மாநிலங்கள், குறிப்பாக ஆந்திரா, புதிய தொற்றுகளை கண்டறிவதை ஒப்பிடும்போது, தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுடைய எண்ணிக்கையை அதிக அளவில் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இதுவே சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது.
மகாராஷ்டிராவில், கடந்த ஒரு வாரத்தில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 சதவீதம் குறைந்துள்ளன. இது 3 லட்சத்துக்கும் மேலானது. இப்போது 2.75 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் சரிவுகள் சற்று குறைவாகவே இருந்தன. ஆனால் இன்னும் குறிப்பிடத்தக்கவையில் உள்ளன.
இது தேசிய அளவில் அனுசரிக்கப்படும் விஷயங்களுடன் ஒத்துப்போகிறது. இப்போது கடந்த 6 நாட்களாக, கொரோனா தொற்றில் இருந்து மீண்டவரக்ளின் எண்ணிக்கை புதிய தொற்று கண்டறியும் என்ணிக்கையை தாண்டிவிட்டன. இந்த போக்கு தேசிய அளவில் மிக நீண்ட காலமாக உள்ளது. இதன் விளைவாக, நாட்டில் சிகிச்சை பெறும் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை செப்டம்பர் 17ம் தேதி 10.17 லட்சத்திலிருந்து இப்போது 9.66 லட்சமாக குறைந்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடக்கத்திலிருந்து இதற்கு முன்னர் ஒருபோதும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் இதுபோல ஒரு சீரான சரிவு காணப்படவில்லை.
நாடு முழுவதும் புதன்கிழமை 86,500க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டன. அதே நேரத்தில் 87,300 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 57.32 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 46.74 பேர் அல்லது கிட்டத்தட்ட 82 சதவீதம் பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இப்போது 91,500ஐத் தொட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 1,000க்கும் மேற்பட்ட கொரோனா இறப்புகள் பதிவாகி வருகிறது.