புதன், 30 செப்டம்பர், 2020

நாடு முழுவதும் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

 தமிழகத்தில் கலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்தும் திட்டமில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்துடன் சேர்த்து அசாம், கேரளா, மேற்வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற தெகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தற்போதைக்கு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளளது. மாநிலங்கள் தற்போதைக்கு தேர்தல் நடத்துவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதைடுத்து, நாடு முழுவதும் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டீஸ்கர், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, நாகலாந்து தெலங்கானா, உத்தர பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதோடு சேர்த்து பீகாரில் உள்ள வால்மீகி நகர் மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. 

இதில் மணிப்பூர் தவிர 54 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3ம் தேதியும், ஒரு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 7ம் தேதியும் நடைபெற உள்ளது. மணிப்பூரில் உள்ள இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 12ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கொரோனா பரவல் காலத்தில் தேர்தல் நடத்துவதற்கென வெளியிட்டுள்ள வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத் தெரிவித்துள்ளது. 

Related Posts:

  • பட்டா மாற்றம் செய்வதில் ... ..மூன்று இனைப்புகள் பயன்படுத்தப்படுகிறது........இனைப்பு 1.. ..பட்டா மாற்ற ...ஆவணங்களை ..கி.நி.அ ரிடம் கொடுக்கும் போது,அவர் தரும் ஒப்புகை ரசீது தான… Read More
  • தேசிய ஊரக வேலை வாய்ப்பு தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருது … Read More
  • காணவில்லை. அவசியம் பகிருங்கள்.... காணவில்லை..!!! காணவில்லை..!! நேற்று மாலை முதல் இந்த படத்தில் இருக்கும் இந்த சிறுவன் காணவில்லை. பெயர் சுலைமான்வேலூர் மா… Read More
  • அலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது ?? அலுமினிய ஏணி எப்படி தயாரிப்பது ?? சேலம்:தற்போது சந்தைக்கு அதிகம் வரத் தொடங்கியுள்ள புது வகை ஏணிகள், பாதுகாப்பு அளிப்பதோடு, பெண்களும் சுலபமாக பயன்ப… Read More
  • ‘வாய் துர்நாற்றமா..?’ பயம் வேண்டாம்! தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன் நல்லெண்ணெய்யால் வாயை நன்றாகக் கொப்பளியுங்கள், உங்கள் வாயிலிருந்து வரும் துர்நாற்றம் சுத்தமாக இல்லாமல்… Read More