விவசாயிகளின் முதுகில் முதலமைச்சர் குத்திவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த சட்டம் நிறைவேற்ற பட்டால், விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஆதாரவிலை கிடைக்காது என்றும் பெரும் வியாபாரிகள் மட்டுமே வேளாண் பொருட்களை இருப்பு வைத்து கள்ள மார்கெட்டில் விற்பனை செய்யமுடியும் என்றும் குற்றம் சாட்டினார்.
இந்த சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட போவதாக அறிவித்த முத்தரசன், நாளை திமுக தலைமையில், மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என்றும் கூறினார். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திமுக தலைமையிலான தங்களது மெகா கூட்டணி தொடரும் என்றும், தங்கள் கூட்டணி பலமாக உள்ளதாகவும் முத்தரசன் தெரிவித்தார்.