இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரக் குறிப்பின்படி, கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 83,347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,085 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 56,46,011 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் தொற்றுநோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90,020 ஆக அதிகரித்துள்ளது.
மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45,87,614 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிகையானது 9,68,377 ஆக உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,62,79,462 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் நேற்று மட்டும் நாடு முழுவதும் 9,53,683 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும், இதன்மூலம் தொற்று உறுதியானவர்களை விரைவாக கண்டறிந்து நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.