வெள்ளி, 18 செப்டம்பர், 2020

பார்வையற்றவர்களுக்கு மீண்டும் கண் பார்வையை அளித்திடும் அறிவியல் அதிசயம் Bionic Eye

 பார்வையற்றோர் தங்களை சுற்றி உள்ள மக்கள் மற்றும் பொருட்களை காண்பதற்கு உதவும் பயோனிக் கண்ணை மருத்துவர்கள் கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர். 

பார்வை என்பது அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமான ஒன்று. 
நம்மை சுற்றி நடப்பவற்றை காண்பதற்கும், அன்றாட பணிகளை 
முடிப்பதற்கும் பார்வை அவசியம். பார்வையற்றோர் தினமும். அவர்களது பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காண மருத்துவ உலகில் பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. பிறவியிலேயே பார்வை இல்லாத சிலருக்கு அறுவை சிகிச்சை மூலம் பார்வையை திரும்ப பெறுவதில் கூட சிக்கல் உள்ளது.

தற்போது அவர்களுக்கான வரப்பிரசாதமாக ‘பயோனிக் கண்’ வந்துள்ளது. நீண்ட காலமாக இதுபற்றிய ஆய்வு நடந்து வந்தது. தற்போது மெல்போர்ன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள பயோனிக் கண் மூலம் பார்வையற்றோர் இனி இந்த உலகை காண முடியும். சேதமடைந்த பார்வை நரம்புகளை தவிர்ப்பதன் மூலம், 
விழித்திரையில் இருந்து மூளையின் பார்வை மையத்திற்கு சமிஞ்சைகளை அனுப்புவதன் மூலம் இது செயல்படுகிறது. 

1

இது பயன்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும் என்கின்றனர். இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருவி ஒன்றை பார்வையற்றோர் தலையில் அணிந்து கொள்ள வேண்டும். இதில் கேமரா மற்றும் wireless transmitter இருக்கும். அவர்களது மூளையிலும் 9 மி.மீ tiles தொகுப்பு பொருத்தப்பட்டிருக்கும். எதிரில் உள்ளவற்றில் இருந்து வரும் சிக்னல் மூலம் இது செயல்பட்டு சுற்றி உள்ள பொருட்கள் அவர்களது கண்களுக்கு தெரியும்.

இந்த பயோனிக் கண் செயற்கை உறுப்பு போல செயல்பட்டு அவர்களுக்கு பார்வையை கொடுக்கும். இது முற்றிலும் பாதுகாப்பானது என்றும், குறைவான பக்க விளைவுகளே ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது இதனை அதிக அளவில் தயாரிக்க நிதியுதவியை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர்.