திங்கள், 14 செப்டம்பர், 2020

தமிழகத்தில் 5 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,02,759 ஆக உயர்ந்துள்ளது. 

அதிர்ச்சியளிக்கும் கொரோனா உயிரிழப்புகள்:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,381 ஆக உயர்ந்துள்ளது. 

அதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,717 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 4,47,366 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 47,012 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா பாதிப்பு - பாலின வாரியான விவரம்:

தமிழகத்தில் இதுவரை தொற்று உறுதியான 5,02,759 பேரில், 3,03,201 பேர் ஆண்கள், 1,99,529 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 29 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 58,88,086 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 84,308 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

சென்னையில் 994 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,48,584 ஆக உயர்ந்துள்ளது. 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு:

Image


Related Posts: