ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் மூன்று இலைகள்!

 


ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த துளசி, கறிவேப்பிலை, வேப்பிலை நல்ல பலனைக் கொடுக்கும். 

தற்போதைய உலகில் ஏராளமானோர் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொந்தரவுகளால் உங்களுக்கு மேலும் சில நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இயற்கையான உணவுகள் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்த முடியும். மருத்துவர்கள் அறிவுரைப்படி, மருந்துகள் எடுக்க வேண்டியதும் அவசியம். ஆனால் நீங்கள் ஆரம்பத்திலேயே சத்தான, ஆரோக்கியமான உணவுகளை தினமும் எடுத்துக் கொண்டால், மருந்துகள் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு செல்ல மாட்டீர்கள். அந்த வகையில் தற்போது 3 இலைகளையும், அதன் பயன்களையும் பார்ப்போம்.

துளசி இலைகள்:

1
இது மூலிகைகளின் ராணி என அழைக்கப்படுகிறது. இயற்கை நமக்கு கொடுத்த அருமருந்து இது என்றே சொல்லலாம். இதனால் உங்கள் உடலுக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படும். உடலை நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் சக்தியும் இதற்கு உண்டு. நீரிழிவு நோயாளிகள் வெறும் வயிற்றில் துளசி இலைகள் சாப்பிட்டால் ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமல்லாமல் இதயம் சம்பந்தமான நோய்கள், பக்கவாதம் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் இது முக்கிய பங்காற்றுகிறது. இதனை தண்ணீரில் போட்டு வைத்து அதனை குடிப்பது நல்லது.

கறிவேப்பிலை:

2
இந்திய சமையலில் அதிகம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று கறிவேப்பிலை. இது உணவில் நறுமணம் சேர்ப்பது மட்டுமல்லாமல் பல்வேறு சுகாதார பண்புகளையும் கொண்டுள்ளது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் உற்பத்தி செய்யும் உயிரணுக்களை தூண்ட உதவும். இவை ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும் உதவுகிறது. தலைமுடி ஆரோக்கியத்திலும் கறிவேப்பிலைக்கு பங்கு உண்டு. அதனால் உணவு உட்கொள்ளும் போது இதனை சாப்பிடாமல் இருக்காதீர்கள்.

வேப்பிலை:

3
வேப்பிலைகளில் பல ஆரோக்கிய பண்புகள் காணப்படுகின்றன. இதனை தினமும் சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் உங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கண்காணிப்பது நல்லது. ஏனெனில் தினமும் இதனை சாப்பிடும் போது ரத்த சர்க்கரை அளவு அதிகம் குறைந்து விடவும் வாய்ப்புள்ளது. அதற்கேற்ற வகையில் மருத்துவர் பரிந்துரைப்படி இதனை எடுத்து கொள்ளுங்கள். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு அளவை குறைப்பதற்கும் வேப்பஞ்சாறு உதவும்.


Related Posts: