சிக்கிம் மாநில எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் வழிதவறி இந்தியப் பகுதிக்குள் நுழைந்து சிக்கித் தவித்த 3 சீன குடிமக்களை மீட்ட இந்திய ராணுவத்தினர் அவர்களுக்குக்கு தேவையான உதவிகளை செய்து பத்திரமாக அவர்கள் நாட்டுக்கு அனுப்பிவைத்தனர்.
இந்தியா சீனா எல்லையில் கடந்த ஜுன் மாதம் இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரு நாடுகளும் தங்கள் படைகளை எல்லையில் குவித்து வருகின்றனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிக்கிம் எல்லையில் வழித்தவறி இந்திய பகுதிக்குள் சிக்கித் தவித்த சீன குடிமக்களை இந்திய ராணும் மீட்டு பத்திரமாக அவர்கள் நாட்டுக்கு அனுப்பிவைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு சிக்கிமில் ஒரு பெண் உட்பட 3 சீனர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு காரில் திரும்பும் போது வழிதவறி 17,500 அடி உயர மலையில் கடும் குளிரில் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்த இந்திய ராணுவத்தினர் உடனடியாக அங்கு சென்று ஆபத்தான நிலையில் இருந்த சீனர்களை மீட்டு அவர்களுக்கு ஆக்சிஜன் அளித்து, உணவு வழங்கி, குளிர் தாங்கும் உடைகளையும் தந்துள்ளனர். பின்னர் பத்திரமாக அவர்களது இருப்பிடம் செல்ல உதவியுள்ளனர்.
இத்தகவலை ராணுவத்தின் மக்கள் தொடர்பு கூடுதல் இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் படங்களுடன் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
मानवता सर्वोपरि#IndianArmy extends help and #Medical assistance to stranded #Chinese citizens at the India - China Border of #NorthSikkim at altitude of 17,500 feet under extreme climatic conditions.
— ADG PI - INDIAN ARMY (@adgpi) September 5, 2020
For #IndianArmy #Humanity is foremost#HumanValues#IndianArmy#NationFirst pic.twitter.com/mdW7Tka0wo