வியாழன், 11 ஆகஸ்ட், 2022

பிகாரின் அரசியல் சாணக்கியர் நிதிஷ் குமார்

 Bihar chanakya nitish kumar

பிகார் மாநிலத்தின் முதல்-அமைச்சராக 8ஆவது முறையாக பதவியேற்கவுள்ள நிதிஷ் குமார்

ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் (71) பிகார் முதலமைச்சராக 8ஆவது முறையாக இன்று (புதன்கிழமை) மதியம் 2 மணிக்கு எளிய முறையில் பதவி ஏற்கிறார்.
ராஜ் பவனில் அவருக்கு ஆளுநர் பாகு சௌகான் நிதிஷ் குமாருக்கு பதவி பிரமாணம் மற்றும் இரகசிய காப்பு பிரமாணம் செய்துவைக்கிறார்.

முன்னதாக நிதிஷ் குமார் செவ்வாய்க்கிழமை ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்வை சந்தித்து ஆதரவு கோரினார்.
இந்த நிலையில் மெகா கூட்டணியுடன் மீண்டு(ம்) மாநிலத்தின் முதல் அமைச்சராக நிதிஷ் குமார் பதவி ஏற்கிறார். அவருடன் தேஜஸ்வி யாதவ் மற்றும் 3 அல்லது 4 அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர்.

இந்த மகா கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன், காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் சில சுயேச்சைகளும் இடம்பெற்றுள்ளனர்.
நிதிஷ் குமார் 2000ஆவது ஆண்டு முதல் தற்போதுவரை 8ஆவது முறையாக முதல் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். முன்னதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்தார்.

பின்னர் அக்கூட்டணியில் இருந்து விலகி ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை ஒன்றிணைத்து மகா கூட்டணி அமைத்து வெற்றி பெற்றார்.
தொடர்ந்து, இந்தக் கூட்டணியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 2020 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியை தனதாக்கினார்.

அந்தத் தேர்தலில் தனிப்பெரும்பான்மைக்கும் தேவையான இடங்களை விட கூடுதலாக 3 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் மீண்டும் மகா கூட்டணியை அமைத்துள்ளார் நிதிஷ் குமார். அந்த வகையில் அவரை அரசியல் சாணக்கியர் என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


source https://tamil.indianexpress.com/india/nitish-kumar-chanakya-of-bihar-set-to-be-sworn-in-as-cm-for-record-eighth-time-492226/