TNSRLM recruitment Madurai, Pudukkottai, Sivaganga district jobs: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் வட்டார அளவில் பல்வேறு பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் மதுரை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், வட்டார வள பயிற்றுநர் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 16.08.2022 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வட்டார இயக்க மேலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1 (மதுரை)
கல்வித் தகுதி : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வட்டார ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 20 (மதுரை – 9, புதுக்கோட்டை – 11)
கல்வித் தகுதி : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வட்டார வள பயிற்றுநர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 12 (சிவகங்கை)
கல்வித் தகுதி : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வட்டார வள பயிற்றுநர் பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட இணையதளப் பக்கங்களில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மதுரை : https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/08/2022080236.pdf மற்றும் https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/08/2022080283.pdf
சிவகங்கை : https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2022/08/2022080891.pdf
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மதுரை : இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, புதுநத்தம் ரோடு, ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில், மதுரை
சிவகங்கை : இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலக வளாகம், சிவகங்கை அஞ்சல் – 630562, சிவகங்கை மாவட்டம்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுய விவர குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
புதுக்கோட்டை : இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர், மாநில ஊரக வாழ்வாதர இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலக வளாகம், புதுக்கோட்டை மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.08.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட இணையதளப் பக்கங்களைப் பார்வையிடவும்.
மதுரை : https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/08/2022080231.pdf
புதுக்கோட்டை : https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2022/08/2022080297.pdf
சிவகங்கை : https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2022/08/2022080814.pdf
source https://tamil.indianexpress.com/education-jobs/tnsrlm-recruitment-madurai-pudukkottai-sivaganga-district-jobs-492467/