திங்கள், 7 ஜனவரி, 2019

நீதிமன்ற உத்தரவையும் மீறி 8 வழி சாலை திட்டப்பணிகளை மேற்கொள்ளும் தமிழக அரசு! January 06, 2019


Image
விவசாயிகளின் எதிர்ப்பையும், நீதிமன்ற உத்தரவையும் மீறி எட்டு வழி சாலை திட்டப்பணிகளை மேற்கொள்ளும் தமிழக அரசை கண்டித்து சேலம் அருகே விவசாயிகள் குடும்பத்தோடு பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
சேலம் – சென்னை இடையில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பசுமை வழி சாலை என்ற பெயரில் அரசு அறிவித்து உள்ள எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பொதுமக்களும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திட்டத்திற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,  திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட அனுமதி கேட்டனர்.
காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், உத்தமசோழபுரத்தில் ஒன்று திரண்ட விவசாயிகள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப்போராட்டத்திற்கு திமுக, அமமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாமக, தமாகா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதேபோல் எட்டு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மண்மலை பகுதியில், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
source ns7.tv