ஞாயிறு, 6 ஜனவரி, 2019

அந்தமானில் இன்றிரவு கரையை கடக்கிறது பாபுக் புயல்! January 06, 2019

Image


அந்தமானில் இன்றிரவு பாபுக் புயல் கரையை கடக்க உள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
அந்தமானில் நிலை கொண்டுள்ள பாபுக் புயல், இன்றிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றும், நாளையும் அந்தமான் தீவு பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
நாளை வரை அந்தமான் மற்றும் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

source ns7.tv