திங்கள், 7 ஜனவரி, 2019

கிராமப்புறங்களில் பெருகி வரும் ஆங்கிலப் பள்ளிகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக வைரமுத்து கவலை! January 07, 2019

Image

கிராமப்புறங்களில் பெருகி வரும் ஆங்கிலப் பள்ளிகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக கவிஞர் வைரமுத்து கவலை தெரிவித்துள்ளார். 
திருப்பூரில் வெற்றித்தமிழர் பேரவை சார்பில் கவிக்கோ அப்துல்ரகுமானின் கவிதைகளை பறைசாற்றும், தமிழாற்றுப்படை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சரவணன், திமுக எம்.பி, கனிமொழி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 
கவிக்கோ அப்துல்ரகுமானின் கவிதைகளை விளக்கிப் பேசிய வைரமுத்து, தமிழினமே தமிழ் மொழி மீது நம்பிக்கை கொள்ளவில்லை என்று கூறினார். தமிழ் வழி கற்றல் நமது தலையாய கடமை என்பதை உணர வேண்டும் என்று தெரிவித்த வைரமுத்து கிராமப்புறங்களில் பெருகி வரும் ஆங்கிலப் பள்ளிகளால் தமிழ் மொழிக் கல்வி பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தார். 
source: ns7.tv