எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. ரஃபேல் விவகாரம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்க வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றும் அவை தொடங்கியதும் அமளியில் ஈடுபட்டதால், முதலில் நண்பகல் 12 மணி வரையும் அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். இதேபோன்று, முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக்கட்ட எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகம் முன்பு அதிமுக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மேகதாது விவகாரத்தில் தீர்வு ஏற்படுத்தக்கோரி முழக்கம் எழுப்பினர். இதனிடையே, நாடாளுமன்ற நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி, மக்களவையில் இருந்து மேலும் 3 அதிமுக உறுப்பினர்களை நாளை வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.
source ns7.tv