திங்கள், 7 ஜனவரி, 2019

காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும்!” - மு.க.ஸ்டாலின் January 07, 2019

Image


நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவதில் உள்நோக்கம் இருப்பதாக தாம் முன்னரே கூறியிருந்ததாகவும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் பகுதியில் நிவாரண பணிகள் தடைபட்டு விடக்கூடாது என்பதே திமுகவின் விருப்பம் என்றும் கூறியுள்ளார். 
அனைத்து கட்சிகள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்துக்கு இணங்க இடைத்தேர்தலை ரத்து செய்துள்ள முடிவை அனைவரும் வரவேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலுடன், காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நாளில் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்

source: ns7.tv