source : ns7tv
போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் புதிய செயலியை கோவை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
தலைக்கவசமின்றி இருசக்கர வாகனம் இயக்குதல், வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துதல், பேருந்துகளின் படிக்கட்டில் பயணம் செய்தல் உள்ளிட்ட புகார்களை இந்த செயலி மூலமாக மக்கள் தெரிவிக்கலாம். “POLICE E-EYE“ என பெயரிடப்பட்டுள்ள செயலியின் செயல்பாட்டை கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரண் தொடங்கி வைத்தார். புதிய செயலியை ஆன்ராய்டு செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
காவல்துறை ஆணையர் சுமித்சரண் கோவையில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். வெளிமாநிலங்களில் குற்ற செயல்கள் செய்து விட்டு, இங்கு வந்து பதுங்குகின்றனர். இங்கிருந்து தப்பி செல்லாமல் இருக்க, அவர்களது மீது நடவடிக்கைகள் மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று போன்ற அதிரடி நடவடிக்கை மூலம் கோவை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.