மதுரை தமிழ்ச் சங்கத்தில் அமைந்துள்ள கீழடி அருங்காட்சியகத்திற்கு, 10 நாளில் 7 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருட்கள், மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. கீழடி எவ்வாறு இருந்தது என்பதற்கான மாதிரிகள், முப்பரிமாண நடைமேடை உள்ளிட்ட, பல்வேறு தொல்லியல் சார்ந்த தகவல்களுடன் கூடிய பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே பழந்தமிழர்களின் நாகரிகத்தை பற்றி தெரிந்துக்கொள்ள பள்ளி மாணவர்கள், சுற்றுலா பயணிகள், என கடந்த 10 நாட்களில் மட்டும், சுமார் 7 ஆயிரம் பேர், அருங்காட்சியகத்திற்கு வருகை தந்துள்ளதாக, அதன் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
credit ns7.tv