தமிழக முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, அரசு மருத்துவர்கள் மேற்கொண்ட போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு, மருத்துவர்களின் பணியிடங்களை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு மருத்துவர்களின் போராட்டம் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது.
இப்போராட்டத்தின் காரணமாக நோயாளிகள் பாதிக்கப்படுவதால், மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு இன்று காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கெடு விதித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மருத்துவர்கள், தங்களது வேலை நிறுத்தத்தை கைவிட்டு விட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனை ஏற்று, தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
credit ns7.tv