ஞாயிறு, 10 நவம்பர், 2019

வெளிநாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி...!

விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் துறை செயலாளர்கள் மட்டத்திலான கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய, அரசு முடிவெடுத்துள்ளதாக, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
வரும் 15 முதல் டிசம்பர் 15 வரையிலான இடைப்பட்ட காலத்தில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, எம்எம்டிசி நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

credit ns7.tv

Related Posts: