ஞாயிறு, 10 நவம்பர், 2019

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்து பல்வேறு தலைவர்கள் கருத்து!

Image
பாபர் MASJID வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாகவும், அதே நேரத்தில் தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை எனவும் இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரிய வழக்கறிஞர் சஃபார்பாய் ஜிலானி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார். நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் ஜிலானி கேட்டுக் கொண்டார்.
பாபர் MASJID  வழக்கின் தீர்ப்பு சமரச முயற்சி அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில், தீர்ப்பில் அரசியல் தலையீடு இருப்பதை உணர முடிகிறது எனவும், சட்டம், ஆதாரங்களை வைத்து வழங்கப்பட்ட தீர்ப்பாக இது அமையவில்லை என்றும் விமர்சித்தார். 
ராமர் கோயிலை கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக, எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் தெஹலான் பாகவி தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ராமர் கோயிலை இடித்துவிட்டுதான் மசூதி கட்டப்பட்டது என்பதை உச்சநீதிமன்றம் மறுத்துள்ளதாகவும், இது மிக முக்கியமான ஒன்று எனவும் குறிப்பிட்டார். நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் தெஹலான் பாகவி வேண்டுகோள் விடுத்துள்ளார். 
credit ns7.tv