திங்கள், 11 நவம்பர், 2019

முன்முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்....!னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்....!

credit NS7.tv 
Image
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார்.  அவருக்கு வயது 87.
முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன், பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், சென்னை ஆர்.ஏ. புரத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். அவரது மனைவி ஏற்கனவே காலமான நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டி.என்.சேஷன், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, நேற்றிரவு 9.45 மணியளவில், அவரது உயிர் பிரிந்தது. இதுகுறித்து டி.என்.சேஷனின் உறவினர் ஸ்ரீவித்யா கூறுகையில், உடல்நலக்குறைவு பாதிக்கப்பட்ட நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, டி.என்.சேஷனின் உயிர் பிரிந்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில், சேஷனின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, சென்னை ஆர்.ஏ.புரம், சென்மேரிஸ் சாலையில் உள்ள, அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் இறுதிச்சடங்கு, இன்று மதியம் மூன்று மணிக்கு மேல், பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெறும், என அறிவிக்கப்பட்டுள்ளது. 
திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் என்ற இயற்பெயரை கொண்ட இவர், கேரள மாநிலம், பாலக்காடு திருநெல்லையில் கடந்த 1932-ம் வருடம் பிறந்தார். சென்னை தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து, அதே கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். அதன் பின் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த 1955ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்து, பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் 10-வது தலைமை தேர்தல் ஆணையராக, 1990ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இவர் தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றிய போதுதான், வாக்காளர் அடையாள அட்டை அறிமுகம், தேர்தல் செலவுக்கு கட்டுப்பாடு, நடத்தை விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும், என்ற நிலையை கட்டாயப்படுத்தி பொதுமக்களின் பாராட்டுகளை பெற்றார்.