கிழக்கு திசைக் காற்று தடைபட்ட காரணத்தால் வடசென்னை பகுதிகளில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பல்வேறு காரணிகளால் காற்று மாசு அதிகரித்துள்ளது. எனினும், இந்த பாதிப்பு தமிழகத்திற்கு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வது கிழக்கு திசையில் இருந்து வீசும் சுத்தமான காற்றுதான் என்று கூறப்படுகிறது.
தற்போது வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் குறைந்துள்ளதும், கிழக்கு திசையில் இருந்து தமிழகத்தை நோக்கி வீசும் காற்று நின்றுள்ளதும், காற்றுமாசு அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், வடசென்னையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 5 மடங்கிற்கு காற்று மாசு அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே நிலை அடுத்த 2 நாட்களுக்கு தொடரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
credit ns7.tv