ஞாயிறு, 3 நவம்பர், 2019

தலைநகர் டெல்லியில் அபாய அளவை எட்டியது காற்று மாசு...!

Image
தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு அபாய அளவு எட்டியுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 
அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப் பகுதிகளில் தீயிட்டு கொளுத்தப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லி காற்று மண்டலத்தில் நச்சுப் பொருட்களின் அளவு இன்று காலை முதல் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து காணப்படுகிறது. இதுதொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில், காற்று மாசு காரணமாக டெல்லியில் வசிக்கும் மக்கள் பலவற்றை இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி அரசும் பிற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

credit ns7.tv