நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளன.
தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு லட்சம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற தகுதியானவர்கள் என்றும், விருப்ப ஓய்வு பெற விரும்புவோர் டிசம்பர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பணியாற்றிய ஆண்டுகளில் ஓராண்டுக்கு 35 நாட்கள் ஊதிய வீதமும், ஓய்வு பெறுவதற்கு மீதமுள்ள ஆண்டுகளில் ஓராண்டுக்கு 25 நாட்கள் ஊதியம் வீதமும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பணியாளர்கள் விருப்ப ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
credit ns7.tv