சனி, 9 நவம்பர், 2019

பாபர் MASJID வழக்கு கடந்து வந்த பாதை...!


Image
இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாபர் MASJID  வழக்கு விவகாரம்  கடந்து வந்த பாதை:
➤1527ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில்  முகலாய படைத்தலைவர் மீர் பாகினால் பாபர் MASJID  கட்டப்பட்டது
➤1992ம் ஆண்டு  ஆர்.எஸ்.எஸ். - வி.ஹெச்.பி தொண்டர்களால் பாபர் MASJID  இடிக்கப்பட்டது 
➤1992ல்  நாடு முழுவதும் மதக்கலவரம் வெடித்து 2000 பேருக்கு மேல் பலியாகினர்
➤1993ம் ஆண்டு இந்த வழக்கில் அத்வானி மற்றும் பாஜக தலைவர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. 
➤2002ம் ஆண்டு பாபர் MASJID  அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணையை தொடங்கியது.  
 
➤2010ல் சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா - ஆகிய 3 பிரிவினரும் சமமாக பிரித்துக் கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 
➤2011ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது
➤2016ல் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ராமர் கோயிலை கட்டுவதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  
➤2017ம் ஆண்டு சம்பந்தப்பட்ட இரு பிரிவினரும் நீதிமன்றத்திற்கு வெளியே பேசி தீர்த்துக்கொள்ளலாம் என அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் கூறினார். 
➤2018ம் ஆண்டு  சுப்பிரமணியன் சுவாமியின் மனு உள்ளிட்ட அனைத்து இடைக்கால மனுக்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
➤2019ம் ஆண்டு ஜனவரி மாதம் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நியமிக்கப்பட்டது
➤2019 மார்ச்சில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது. 
➤2019ம் ஆண்டு மே மாதம் மத்தியஸ்த குழு இறுதி அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
➤ஆகஸ்ட் மாதம் வழக்கு தொடர்பான தினசரி விசாரணையை தொடங்கியது உச்சநீதிமன்றம்.
➤பாபர் MASJID  வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதை முன்னிட்டு  டிசம்பர் 10ம் தேதி வரை அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் அக்டோபர் 14ந்தேதி உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டது
➤பாபர் MASJID  வழக்கில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற விசாரணை அக்டோபர் 16ந்தேதி முடிவுக்கு வந்தது.