அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதையொட்டி இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஆலோசனை நடத்தினர்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. மிக முக்கிய வழக்கின் தீர்ப்பு என்பதால் நாட்டில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இல்லத்தில் சமுதாய நல்லிணக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் இஸ்லாமிய மத குருக்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாட்டில் எந்த சூழ்நிலையிலும் சமூக, மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் காப்பது என்று கூட்டத்தில் உறுதி எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நமது கலாசாரம் என்று கூறினார்.
ஒற்றுமையின் பலத்தை பாதுகாப்பது அனைத்து பிரிவினரின் கூட்டு பொறுப்பு என்று கூறிய அவர், ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலில் ஈடுபடுவோரிடம் இருந்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
credit ns7.tv