புதன், 6 நவம்பர், 2019

திருவள்ளுவர் விவகாரம் : ப. சிதம்பரம் கடும் விமர்சனம்!

Image
திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசப்பட்ட விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.  
காவி உடை அணிந்திருப்பது போலான திருவள்ளுவரின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், தனக்கு காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் 833வது குறளை இயற்றியிருக்கலாம் என தனக்கு தோன்றுவதாக விமர்சித்துள்ளார்.

"நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்" 
என்ற குறளை பதிவு செய்துள்ள ப.சிதம்பரம், பழி பாவங்களுக்கு வெட்கப்படாமையும், நன்மையானவற்றை நாடாமையும், அன்பு இல்லாமையும், நன்மையானவற்றை விரும்பாமையும் பேதையின் தொழில்கள் என குறள் விளக்கத்தையும் பதிவிட்டுள்ளார்.

credit ns7.tv

Related Posts: