புவி கண்காணிப்பு மற்றும் ராணுவ பாதுகாப்புக்கு உதவும் ரிசாட் 2பி ஆர்-1 செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை மூன்று மணி 25 நிமிடங்களுக்கு ரிசாட் 2பி ஆர்-1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. அதற்கான 26 மணி நேர கவுண்டவுன் நேற்று மாலை 4 மணி 40 நிமிடங்களுக்கு தொடங்கியது.
628 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், வேளாண்மை, வனக் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் ராணுவ பாதுகாப்புக்கு உதவும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ரிசாட் செயற்கைக்கோளுடன், அமெரிக்கா, இஸ்ரேல், இத்தாலி மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த வர்த்தக ரீதியிலான 9 செயற்கைக்கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்படுகின்றன. எரிபொருள் நிரப்பும் பணி நிறைவு பெற்றதை அடுத்து, இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
credit ns7.tv