credit ns7.tv
கடந்த காலங்களில் இலங்கையில் இருந்து வந்த 8 முதல் 9 லட்சம் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் அமித்ஷா விளக்கம் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்த மாசோதா மீதான விவாதங்கள் மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது மசோதா மீதான விவாதம் குறித்து பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இலங்கையிலிருந்து புலம்பெயரும் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண, முன்னதாகவே சட்டம் இயற்றப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். மேலும், 3 நாடுகளைச் சேர்ந்தவர்களின் பிரச்சனைகளை களையவே தற்போது சட்டம் இயற்றப்படுவதாக அவர் கூறினார்.
யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்றும், முஸ்லிம்கள் இது குறித்து கவலைப்படத் தேவையில்லை எனவும் அமித்ஷா கூறினார். இம்மசோதா குடியுரிமை வழங்குவதற்காக மட்டுமே, பறிப்பதற்காக இல்லை என்று அவர் விளக்கினார். அசாமின் கலச்சாரம், மொழி ஆகியவை காக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது பாகிஸ்தானிலிருந்து குடியேறிய 13,000 இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டதை அமித்ஷா குறிப்பிட்டார். மதரீதியில் நாட்டை பிரித்ததால், எழுந்த பிரச்சனைகளை அடுத்தடுத்து வந்த அரசாங்கள் தீர்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களவையில் ஆதரித்த சிவசேனா, மாநிலங்களவையில் எதிர்க்கிறார்கள், ஒரே இரவில் நடந்தது என்ன? என்று அமித்ஷா வினவினார். குடியுரிமை சட்டதிருத்த மசோதாவில், முஸ்லிம்களின் குடியுரிமையில் தலையிடுவது குறித்த வரைவு இல்லாதபோது, அதை எப்படி முஸ்லிம்களுக்கு எதிரானதாக கருதமுடியும் என மாநிலங்களவையில் கேள்வியெழுப்பினார்.