செவ்வாய், 3 டிசம்பர், 2019

பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

CREDIT NS7.TV
Image
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றில் 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான, 105 அடியை எட்டியுள்ள நிலையில், அணைக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைக்கு வரும் நீர் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வருவாய்த் துறை, நகராட்சி மற்றும் காவல்துறை சார்பில்  சத்தியமங்கலம், ஆர்.எம்.பி. நகர் உள்ளிட்ட பவானி ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மற்றும் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts: