சனி, 7 டிசம்பர், 2019

தெலங்கானா என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு உத்தரவு!

Image
தெலங்கானா பெண் மருத்துவர் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் லாரி டிரைவர் உட்பட 4 பேர் கைது செய்யப்படடனர். இந்நிலையில் குற்றம் தொடர்பான விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது தப்பிக்க முயன்றதால் ஹைதராபாத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக ஹைதராபாத் காவல்துறைக்கு ஒருபுறம் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் மறுபுறம் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில், ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. என்கவுன்டர் விவகாரத்தில் காவல்துறை முறையாக செயல்படவில்லை என கருத்து தெரிவித்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், வழக்கை சட்டப்படியே நடத்தியிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. 
இந்த என்கவுன்டர் விவகாரம் தொடர்பாக தெலங்கானாவுக்கு விசாரணை குழு ஒன்றை அனுப்பியுள்ள ஆணையம், விரைந்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களை டிசம்பர் 9 ஆம் தேதி வரை பதப்படுத்தி வைக்க தெலங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

credit ns7.tv