புதன், 4 டிசம்பர், 2019

எட்டு வழி சாலை திட்டம் : மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றம் கண்டனம்

Image
சேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்‍கல் செய்யாத மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்றும், மேற்கொண்டு நிலத்தை கையகப்படுத்தக்‍ கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, 8 வழிச்சாலை திட்டத்தின் இயக்குனர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையின் போது விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இன்று நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசு தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
credit ns7.tv