செவ்வாய், 10 டிசம்பர், 2019

ஆபாச படங்கள் பார்ப்பவர்களுக்கு கனடா ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!

credit ns7.tv
Image
ஆபாச படங்கள் பார்ப்பது மூளையின் செயல்பாடுகளை பாதிப்பதோடு, பார்ப்பவர்களின் நடவடிக்கைகளையும் மாற்றியமைக்கிறது என்று கனடாவின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

இந்தியா முழுக்க இணையதளம் பெரும் வளர்ச்சி பெற்றதில் இருந்து, ஆபாசப் படங்கள் பார்ப்பது ராக்கெட் வேகத்தில் வேகமெடுத்தது. உலகின் மிகப்பெரிய இலவச ஆபாச தளம், 2018ம் ஆண்டில் மட்டும் சுமார் 33.5 பில்லியனுக்கும் அதிகமான முறை தேடப்பட்டிருப்பதும் இதனை உறுதிப்படுத்துகிறது. 
ஆபாச படங்கள் பார்ப்பது பல்வேறு நரம்பியல் பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதால், மனஉளைச்சல் முதல் பாலியல் வாழ்க்கையில் பாதிப்புகள் வரை அடுக்கடுக்கான நரம்பியல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆபாசப்படம் பார்ப்பவர்களின் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த கனடாவின் லாவல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் அன்னே பாரின் ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன. 
மனித உடலில் பாலியல் செயல்பாடுகளுக்கு, நமது மூளையில் உள்ள டோபோமைன்தான் காரணம். ஆபாச படங்கள் பார்க்கும்போது, இந்த டோபோமைன் அதிகளவு சுரக்கிறது. இதனால், மென்மேலும் ஆபாசப் படங்களைப் பார்க்கும் இச்சை தூண்டப்படுகிறது.