credit ns7.tv
விமானத்தை இயக்கும் இந்த கால்கள் உலகத்திற்கு சொல்லும் செய்தி மிகவும் அதி உன்னதமானது. குறைகளை வெல்ல திறமைகள் தான் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதற்கான சாட்சியே இந்த காட்சிகள்.
அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த ஜெசிகா... பிறக்கும் போதே மரபு குறைபாட்டால் தனது இரண்டு கைகளையும் இழந்தவர்.தன்னை பார்க்கும் அனைவரும் குறைகளை மட்டுமே பார்ப்பதை ஏற்றுக்கொள்ள மறுத்த ஜெசிகா, திறமையை கொண்டு அதனை மாற்ற நினைத்துள்ளார்... ஜிம்னாஸ்டிக், நடனம், தற்காப்பு கலைகள் என ஒவ்வொன்றாக கற்க தொடங்கினார் ஜெசிகா
ஒரு கட்டத்தில் தன்னுடைய அனைத்து பணிகளையும் கால்களாலேயே செய்ய ஆரம்பித்தார் ஜெசிகா.. எழுதுவது, சமைத்தல், கார் ஓட்டுதல் என அனைத்தையும் கால்களாலேயே செய்ய தொடங்கினார் ஜெசிகா. இதனை அடுத்து தந்தையின் நண்பர் ஒருவரின் முயற்சியால் விமானத்தை இயக்க ஆரம்பித்துள்ளார் ஜெசிகா... கடும் முயற்சிகளுக்கு பின்னர் பைலட் உரிமமும் பெற்றுள்ளார். கடந்த 2008ம் ஆண்டில் இருந்து விமானம் இயக்கி வருகிறார் ஜெசிகா... இந்த நிலையில் அவரது வீடியோவை Born Different என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். 3 நாட்களில் சுமார் 2 கோடி பேர் இதை பார்வையிட்டுள்ளனர்.
தன்னம்பிக்கையின் மொத்த உருவமாக ஜெசிகாவை கொண்டாடி கொண்டிருக்கின்றனர் இணையவாசிகள். அந்த கொண்டாட்டத்திற்கு அவர் பொருத்தமானவரும் கூட.